தற்போதைய செய்திகள்

சீனப் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் AI ரோபோ: குறைவான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி

சீனப் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் AI ரோபோ சராசரி மதிப்பெண்களை விட குறைவாக எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளது.

DIN

சீனப் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் AI ரோபோ சராசரி மதிப்பெண்களை விட குறைவாக எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளது. சீனாவில் ஒரு பல்கலைக் கழக நுழைவு தேர்வில்  AI ரோபோ பங்கேற்றது.

இது மனிதர்களை விட வேகமாக தேர்வு எழுதி 22 நிமிடங்களில் தேர்வு தாளை பூர்த்தி செய்தது. எனினும் 150 மதிப்பெண்களுக்கு 105 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்த தேர்வை சராசரி மனிதன் எழுதி முடிக்க 2 மணி நேரம் ஆகும். எனினும் அடுத்த ஆண்டு இந்த ரோபோவின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து 130 மதிப்பெண்கள் பெறச் செய்வேன் என்று அதன் தொழில்நுட்ப தலைமை அதிகாரி  லின் ஹுய், தெரிவித்துள்ளார்.  

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2020 ஆம் ஆண்டுக்குள் AI ரோபோக்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. நம் மூளையை ஒத்திருக்கும் நரம்பியல் வலையமைப்புகளை கொண்ட AI ரோபோக்களை முன்னணி பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வுக்கு பயன்படுத்த  உள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் சைன்ஹுவா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT