தற்போதைய செய்திகள்

மவுண்ட்சாரில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி விடுவிப்பு

மத்திய பிரதேச மாநிலம் மவுண்ட்சாரில் தடையை மீறி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

DIN

மத்திய பிரதேச மாநிலம் மவுண்ட்சாரில் தடையை மீறி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராகுல் காந்தியை போலீசார் மாலையில் விடுவித்துள்ளனர். 

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.  

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மவுண்ட்சார் மாவட்டத்திற்கு சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி புறப்பட்டு வந்தார்.

ஆனால், தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உள்ளதால், ராகுல் காந்தி மவுண்ட்சார் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ராகுல் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் அவருடன் வந்த அனைவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT