தற்போதைய செய்திகள்

பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்:  அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.

DIN

சென்னை:  பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: -

சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை பள்ளிகள் விருது வழங்கப்படும். நடப்பாண்டில் 4, 084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பாடத்திட்ட மாற்றம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும். மலைப் பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.

தமிழகத்தில் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மாவட்டத்தில் 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்படும். திறனறி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும். தனித்திறன் கொண்ட மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 32 மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாதம் 7.500 ரூபாய் ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தமிழக மாணவர்கள் கொண்ட கலைத்திருவிழா நடத்தப்படும். மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ்கள் சிற்றிதழ்கள் அளிக்கப்படும். 3,336 முதுநிலை ஆசிரியர்களும், 748 கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். என்பது உள்ளிட்ட 37 புதிய அறிவிப்புகளை சட்டப் பேரவையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT