அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனர் ரோஜர் அலீஸ் காலமானார். அவருக்கு வயது 77.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் என்ற இடத்தில் ரோஜர் உயிர் பிரிந்தது. பாம்பீச் இல்லத்தில் ரோஜர் கீழே விழுந்ததில் ரத்த உறைவு ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1996ம் ஆண்டு அவர் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தை உருவாக்கினார். ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தை தொடங்கும் முன் அவர் வெள்ளை மாளிகையில் ரிச்சார்ட் நிக்சன் தொடங்கி ஜார்ஜ் புஷ் வரை பல அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.