ஒரு மர்மமான கடல் உயிரினம் இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்தோனேஷியா மலூக்கு மாகாணத்தில் சீராம் தீவுப்பகுதியின் கரையில் அழுகிய நிலையில், இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. 15 மீட்டர் நீலம், 35 டன் எடை கொண்ட இந்த உயிரினம் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த அரிய வகை உயிரினத்தின் வீங்கிய உடலைப் பார்க்க செராம் தீவின் ஹுலுங் கடற்கரைக்கு பெரும் கூட்டம் கூடி வருகின்றன. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.