செம்பட்டி அருகே மின்சாரம் பாய்ச்சி பெண் கொலை செய்யப்பட்டாரா என, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய செம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (34) என்பவருக்கும், நிலக்கோட்டை பூசாரிபட்டியைச் சேர்ந்த சண்முகநாதன் மகள் பிரவீனா (27) என்பவருக்கும், கடந்த 2011-இல் திருமணம் நடத்துள்ளது. இவர்களுக்கு, சரண்யா (3) என்ற மகளும், புவனேஸ்வரன் (2) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனது தந்தை வீட்டுக்குச் சென்ற பிரவீனா, கணவர் மணிகண்டன், மாமியார் பழனியம்மாள், உறவினர் துரைபாண்டி ஆகியோர் 20 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வருவதாகவும், நகை வாங்கி வரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுவதாகவும், தந்தை சண்முகநாதனிடம் தெரிவித்தாராம்.
அதையடுத்து, திங்கள்கிழமை பழைய செம்பட்டியில் உள்ள சோமுபிள்ளை என்பவரது தோட்டத்தில் பிரவீனா மர்மமான முறையில் இறந்து கிடத்துள்ளார்.
இது குறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் சண்முகநாதன் தனது மகளை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாக புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.