தற்போதைய செய்திகள்

ரஜினியின் 161-வது படம் 'காலா'

ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி

ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் '2.0' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை, நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரிக்கறார்.

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார். கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற்காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில், ரஜினியின் 161-வது படத்துக்கு காலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷின் வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டது. காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரஞ்சித் கூறுகையில், கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா. ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ஆம் தேதி தொடங்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT