விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக மத்திய அரசு ஏற்க வேண்டும் என தில்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று தில்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் விவசாயிகளை சந்தித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கைலாஷ் பேசுகையில்,
“விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், அவை அனைத்தும் நியாயமானவை. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை உறுதி செய்யதற்காக தான் நேரில் வந்துள்ளேன்.” என தெரிவித்தார்.