தற்போதைய செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

DIN


திருச்சி மாவட்டத்தில், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த ஒன்றியங்களில் 24 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 241 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 4,077 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்நது.

இதில், 12 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 614 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 626 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். இதையடுத்து அந்தநல்லூர் ஒன்றியத்தில் 821 பேர், மணிண்டத்தில் 691 பேர், திருவெறும்பூரில் 775 பேர், மணப்பாறையில் 745, மருங்காபுரியில் 1,137, வையம்பட்டியில் 690, லால்குடியில் 1,224, புள்ளம்பாடியில் 742, மண்ணச்சநல்லூரில் 1,236, முசிறியில் 847, தொட்டியத்தில் 831, தா.பேட்டையில் 686, துறையூரில் 834, உப்பிலியபுரத்தில் 611 பேர் தேர்தல் போட்டியில் களம் கண்டனர். வாக்குப்பதிவு முடிந்து இன்று வியாழக்கிழமை 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.

மணிகண்டம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சு. சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. முன்னணி நிலவரம் 10 மணிக்கு மேல் வெளியாகும்.

முதல் கட்டமாக தபால் வாக்குப் பெட்டி பிரிக்கப்பட்டு எண்ணப்படுகிறது. வாக்குகள் எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT