தற்போதைய செய்திகள்

பிளஸ் 2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

DIN


சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வில் வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை கணிசமான மாணவர்கள் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும்.

மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை 24-ஆம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT