ஒடிசா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்பே அறிவித்தது போல பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா சோதனை செய்யபட்டது.
மேலும், விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.