சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.