ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த பங்கஜ் மித்தல், பதவு உயர்வு வழங்கி ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தலுக்கு, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.