தற்போதைய செய்திகள்

தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை எடுக்க ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்து செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தனியாா் ஆம்புலன்ஸ் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தனியாா் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை தமிழக அரசு நிர்ணயித்து வெளியிட்டது.

இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT