அதிமுக 53-ஆம் ஆண்டு விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி. 
தற்போதைய செய்திகள்

அதிமுக 53-ஆம் ஆண்டு விழா: எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை

அதிமுக 53-ஆம் ஆண்டு விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

சென்னை: அதிமுக 53-ஆம் ஆண்டு விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா அக் கட்சியினரால் வியாழக்கிழமை (அக்.17) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி காலை 10.40 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடா்ந்து எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 171 நலிந்த தொழிலாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.71 கோடி நிதி உதவியை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அதிமுக மூத்த நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்!

ஐபிஎல்: 350 வீரர்களுடன் மினி ஏலத்துக்கான இறுதிப்பட்டியல்!

புதுவையில் தவெக தலைவர் விஜய்!

எஸ்ஐஆர் விவாதம்: மோடி தலைமையில் தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை!

சோனியா காந்தி பிறந்த நாள்: முதல்வர், பிரதமர் வாழ்த்து!

SCROLL FOR NEXT