செய்திகள்

தாய்மார்களே! குளிர்காலத்தில் சரும பராமரிப்பு அவசியம்

DINகுளிர்காலம் தொடங்கிவிட்டது. இப்பருவத்தில் குளிர்ந்த காற்றானது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, மந்தமான, வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். இதனால் பொதுவாக அனைவருமே சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க நல்ல குளிர்கால தோல் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது அவசியம். 

அதிலும் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும் தாய்மார்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களது சருமத்தை பராமரிக்க வேண்டும். 

தோல் பராமரிப்பு விதிமுறை ஒருவரை உடல் ரீதியாக திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு அமைதியான நிலையைக் கொண்டிருக்கிறது. ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தோல் பராமரிப்புக்கு நாம் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். 

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்ய தாய்மார்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். தங்களையும், தங்களது குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க எந்தவிதமான கடுமையான ரசாயனங்களில் கலந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது. 

சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள, மென்மையான, ஹைட்ரேட்டிங் க்ளென்சர், ஈரப்பதம் நிறைந்த பொருட்களான விர்ஜின் தேங்காய் எண்ணெய், கோகோ மற்றும் மா வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். 

வெண்ணெய், கிளிசரின் போன்ற பொருட்களைப் பயன்படுத்தும்போது லோஷன்களைக் காட்டிலும் இது சருமத்தை தேவையான ஆற்றலைத் தருகிறது. 

அதேபோன்று ஈரப்பதத்தை மசாஜ் செய்வது சிறந்தது. மசாஜ் என்பது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பிரசவத்திற்குப் பின்னர் உடலை வேகமாக மீட்க உதவுவதற்கும் ஒரு சிறந்த மற்றும் நிரூபிக்கப்பட்ட தீர்வு என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கும் போது, தனிப்பட்ட கவனிப்பு மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு பால் கொடுக்கும் மார்பு முலைக்காம்புகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்றவற்றை தடவுவதன் மூலமாக  ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதைவிட நீர்ச்சத்து உள்ள சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்தமாக தாய்மார்களுக்கு சிறந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

பிரக்ஞானந்தா, வைஷாலி அசத்தல்! தாய் நாகலட்சுமிக்கு சிறப்புப் பதிவு!

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

SCROLL FOR NEXT