செய்திகள்

பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

DIN

பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்  சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை பூசணி விதைகள் அதிகரிக்கின்றன. பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளதால், மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பூசணி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

எனினும், பூசணி விதைகளை உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?

நிலவில் மிகப்பெரிய குகை: மனிதர்கள் தங்குவதற்கு உதவலாம்!

என்றென்றும் புன்னகை!

தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை: ஆர்.என்.ரவி

சரத் பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்தின் ஆதரவாளர்கள்!

SCROLL FOR NEXT