தொழில்நுட்பம்

மனிதரா இல்லை எந்திரமா? கண்டுபிடிப்பது இனி சிரமம்!

தினமணி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களிடம் பேசுகிறமோ அல்லது எந்திரத்துடன் பேசுகிறோமா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் என்கிறனர் வல்லுநர்கள்.

தொழில்நுட்பங்களின் வருகையும் அதன்  அன்றாட மேம்படுத்தல்களும் அதிகரித்து வரும் சூழலில் பலரும் ஸ்மார்ட்போன்கள் அல்லது கணிணிகளில் தட்டச்சு செய்வதைவிட குரலில் பதிவு செய்து அனுப்புவதையே முதன்மையாக விரும்பி வருகின்றனர்.

சிலருக்கு இது நேரத்தை குறைக்கும் வழி என்றால் இன்னும் சிலருக்கு எழுதுவதில் உள்ள  சிரமம் காரணமாக தட்டச்சு செய்து ஒரு தகவலைப் பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக குரல்பதிவு அம்சத்தையே தேர்வு செய்கின்றனர்.

குறிப்பாக, மூத்த குடிமக்கள் சிறிய திரைவழியாக செய்திகளைப் பரிமாற பெரும்பாலும் வாய்ஸ் டைப்பிங் முறையையே பயன்படுத்துகின்றனர் என ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில்,  குரல் செயற்கை  நுண்ணறிவு(voice artificial intelligence) தொழில்நுடபத்தின் மூலம்  வரும் காலங்களில் செல்லிடப்பேசி போன்ற சாதனங்களில் உரையாடும் குரல்கள் மனிதர்களுடையதா இல்லை எந்திரத்தின் குரலா என சந்தேகம் ஏற்படும் அளவிற்கு குரல் தொழில்நுடபத்தில்(வாய்ஸ் டெக்னாலஜி) பெரிய மாற்றம் நிகழ உள்ளதாக தொழில்நுடப் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

முக்கியமாக, அமேசான் அலெக்ஸா சாதனத்தின் துல்லியமான குரல் திறன்மேம்பாட்டே இதன் துவக்கமாக இருக்கபோகிறது என்றும் கூறியுள்ளனர்.

அதாவது, இனி செய்திகள் அல்லது உரையாடல் போன்றவற்றிற்கும் கூட நுண்ணறிவுத் திறன் மூலம் மனிதர்களின் குரல்களிலேயே எந்திரங்கள் உடனுக்குடன் பதில்கள் அளிக்கும். அந்த அளவிற்கு செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்பதால் மறுமுனையிலிருந்து கேட்கும் குரல் மனிதர்களுடையதா இல்லை எந்திரத்தினுடையதா எனக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த அமைப்பின் மூலம் எதிர்காலத்தில் அனைத்து வகையான தொழில்துறையினரின் பதிவு செய்யப்பட்ட குரல் மூலமாக கருத்துகள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து மைக்ரோசாப்டின் இந்திய தலைமைச் செயலர் ஆனந்த் மகேஸ்வரி, ’குரல் மற்றும் உரையாடல் செயற்கை நுண்ணறிவு அமைப்பு தொழில்நுட்பத்துடன் நாம் எவ்வாறு ஈடுபடுகிறோம் என்பதை கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளோம். இந்தியா போன்ற ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் திரையைப் பார்ப்பதற்கு முழு வசதி இருக்காது. ஆனால், இந்த செயற்கைக் குரல் நுண்ணறிவு அமைப்பு உங்களுக்கு உரையைத் தருகிறது. மக்கள் உண்மையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் குரல் மிகப்பெரிய பகுதியாக மாறும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அப்படி , இந்த நுண்ணறிவு அமைப்பில் மருத்துவருடனோ அல்லது பங்குசந்தை ஆலோசகரிடமோ உரையாடும்போது நம் கேள்விகளுக்கு உடனடியான பதில்கள் கிடைத்தால் அது எந்திரம்தான் என நம்பமுடியுமா என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

SCROLL FOR NEXT