உள்ளாட்சித் தேர்தல் 2019

மாட்டு வண்டியில் சென்று வாக்குச் சேகரித்த ஊராட்சித் தலைவர் வேட்பாளர்

DIN


ஈரோடு: தூக்கநாயக்கன்பாளைம் (டி.என்.பாளையம்) ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர் வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பெருமுகை ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் 25 ஆம் தேதி மாலை ஓய்ந்தது. தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கிறது.  

 தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதுகலைப் பட்டதாரியான பிரகாஷ், தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 25 ஆம் தேதி அன்று ஆதரவாளர்களுடன் மாட்டு வண்டியில் சென்று வாக்குச்சேகரித்தார்.  அப்போது தன்னுடைய சின்னமான மூக்குக் கண்ணாடியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் சென்று வாக்குச் சேகரிக்கும் நிலையில் பிரகாஷ் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தது, பொதுமக்களை கவர்ந்துள்ளது. பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மாட்டுவண்டியில் பிரசாரம் மேற்கொண்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்டக்கரை ஆலயத்தில் அசன விழா

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT