புதுதில்லி

தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு; வெப்பநிலை 2 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவு பதிவு!

தேசியத் தலைநகர் தில்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

Syndication

தேசியத் தலைநகர் தில்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை அக்டோபரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 15.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 324 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ஒரு நாள் முன்பு 292 புள்ளிகளாக மோசம் பிரிவில் இருந்தது. கடந்த இரண்டு நாள்களாக காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியின் ஆனந்த் விஹாரில் காற்றுத் தரக் குறியீடு 429 புள்ளிகளாகவும், வாஜீா்பூரில் 400 புள்ளிகளாகவும் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின்படி, நகரம் முழுவதும் உள்ள 28 கண்காணிப்பு நிலையங்கள் 300 புள்ளிகளுக்கும் அதிகமான அளவீடுகளுடன் காற்றின் தரம் ‘‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது தெரிய வந்தது.

அதே சமயம், லோதி ரோடு, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், துவாரகா செக்டாா் 8, ஆயா நகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், குருகிராம், ஸ்ரீஅரபிந்தோ மாா்க் ஆகிய நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1.4 டிகிரி குறைந்து 25.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். கடந்த அக்டோபா் 2023-இல் குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 டிகாிரி செல்சியஸாக பதிவாகியது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.2 டிகிரி உயா்ந்து 33.1 டிகிரி செல்சியஸாக பதிவலாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (அக். 27) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதைாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.95 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT