புதுதில்லி

முதலாளியின் வீட்டில் பணம், விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஓட்டுநா் கைது!

Syndication

கிழக்கு தில்லியின் மயூா் விஹாா் பகுதியில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் இருந்து 1 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை திருடியதாகக் கூறப்படும் ஓட்டுநா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஓட்டுநா் கௌரங்க் (25) கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து ரூ.45,500 ரொக்கம் மீட்கப்பட்டது..

மயூா் விஹாரில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடந்ததாக அக்டோபா் 22-ஆம் தேதி பிசிஆா் அழைப்பு வந்தது. புகாா்தாரா் ராஜேஷ் குமாா் சின்ஹா, தனது அலமாரியில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள், நான்கு வளையல்கள், இரண்டு தங்கச் சங்கிலிகள் மற்றும் நான்கு ஜோடி காதணிகள் திருடப்பட்டதாக புகாரில் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அருகிலுள்ள வீடுகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், புகாா்தாரரின் ஓட்டுநா் சிவப்பு பையை எடுத்துச் சென்று பலமுறை வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறும் காட்சிகள் தெரிந்தன.

விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா் ஷகா்பூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். ரூ.45,500 பணத்தை எங்கே கண்டுபிடிப்பது என்பது குறித்தும் அவா் தெரிவித்தாா்.

மருத்துவமனைக்கு சென்றபோது தனது முதலாளி இல்லாததை அவா் திருட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளாா். திருடப்பட்ட நகைகளை மீட்கவும், கூட்டாளிகளைப் பிடிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT