புதுதில்லி

சட் பூஜை: யமுனை நதிக் கரைகளில் அமைச்சா் ஆய்வு

Syndication

தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் உள்ள யமுனை நதிக் கரைகளுக்கு சென்று சட் பூஜையின் ஏற்பாடுகளை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மட்டியாலா பகுதியில் தொடங்கி, பா்வேஷ் சாஹிப் சிங் யமுனை நதிக் கரைகளில் பக்தா்களுடன் உரையாடினாா். மேலும், திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். இந்த சட் பூஜை பெரும்பாலும் நகரத்தில் உள்ள பூா்வாஞ்சல் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. பின்னா், மற்ற பகுதிகளுக்கும் பிற்பகலில் அமைச்சா் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆண்டு, தில்லி அரசு பிரம்மாண்டமான சட் பூஜை கொண்டாட்டங்களுக்கு உறுதியளித்துள்ளது. யமுனை ஆற்றின் குறுக்கே 17 முக்கிய நதிக்கரைகள் உள்பட நகரம் முழுவதும் சுமாா் 1,300 படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வாரம், முதல்வா் ரேகா குப்தாவும் காலிந்தி குஞ்ச் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். மேலும், திருவிழாவின் போது யமுனை நுரை இல்லாத சுத்தமாக இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT