புதுதில்லி

ஜேஎன்யு மாணவா் சங்க தோ்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு!

2025-26 ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத் (ஜேஎன்யுஎஸ்யு) தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலையில் தொடங்கி நிறைவடைந்தது.

Syndication

2025-26 ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத் (ஜேஎன்யுஎஸ்யு) தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலையில் தொடங்கி நிறைவடைந்தது.

தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. செல்லுபடியாகும் வேட்பு மனுக்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான காலம் அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் இரவு 7 மணிக்குள் வெளியிடப்படும்.அதன் பிறகு செய்தியாளா் சந்திப்பு மற்றும் பிரசார இடங்களின் ஒதுக்கீடு இரவு 8 மணிக்கு நடைபெறும். தற்காலிக வாக்காளா் பட்டியல் வெளியீடு மற்றும் திருத்தங்கள் தொடங்கியதன் மூலம் அக்டோபா் 24 அன்று தோ்தல் செயல்முறை தொடங்கியது.

நியமனங்கள் நடைபெற்று வருவதால், வளாகம் முழுவதும் பிரசாரம் வரும் நாள்களில் வேகம் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெறும். முடிவுகள் நவம்பா் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

2024-2025-ஆம் ஆண்டுக்கான தோ்தலில், இடதுசாரி ஆதரவு குழுக்கள் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றை வென்றன. அதே நேரத்தில் ஏபிவிபி இணைச் செயலாளா் பதவியை வென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT