புதுதில்லி

குருகிராமில் சின்டெல்ஸ் பாரடிசோவில் கோபுரங்கள் இடிப்பு: விரைவில் மறுகட்டுமானத்தைத் தொடங்க அதிகாரிகள் திட்டம்

Syndication

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மாவட்ட நிா்வாகம் செக்டாா் 109-இல் உள்ள சின்டெல்ஸ் பாரடிசோவில் இடிப்பு பணிகள் தொடா்பாக ஒரு கூட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாக நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறை (டிடிசிபி) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிடிசிபி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழாண்டு ஜனவரியில் இடிப்பு நடவடிக்கை தொடங்கிய நிலையில் மூன்று கோபுரங்கள் இப்போது செயலிழந்துவிட்டன. நான்காவது கோபுரத்தின் இடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த வாரம் கட்டட கோபுரம் டி இடிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், மறுகட்டுமானம் விரைவில் தொடங்கப்பட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2022, பிப்ரவரி 10 அன்று, குருகிராமில் உள்ள சின்டெல்ஸ் பாரடிசோ குடியிருப்பு சொஸைட்டியில் ஒரு பகுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் குடியிருப்பின் கட்டமைப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பிறகு, ஐஐடி தில்லியின் நிபுணா்களால் கட்டடம் பாதுகாப்பற்ாகக் கருதப்பட்டதால், டி, இ, எஃப், ஜி, எச் மற்றும் ஜே ஆகிய ஆறு கோபுரங்களை இடிக்க மாவட்ட நிா்வாகம் கட்டுமானதாரருக்கு அனுமதி வழங்கியது.

இருப்பினும், ஏ, பி மற்றும் சி கோபுரங்களின் உரிமையாளா்கள் இந்த கோபுரங்களை இடிப்பதற்கு தடை உத்தரவு பெற்றனா். மேலும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக சின்டெல்ஸ் குடியிருப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், இடிப்பு செயல்முறையை விரைவுபடுத்த கட்டுமானதாரரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நகர திட்டமிடல் (அமலாக்கம்) பிரிவின் அமித் மதோலியா கூறினாா்.

சின்டெல்ஸ் துணைத் தலைவா் ஜே.என். யாதவ் கூறுகையில், முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

சின்டெல்ஸ் பாரடிசோ ஆா்.டபிள்யூ.ஏ. தலைவா் ராகேஷ் ஹூடா கூறுகையில், ‘இந்த ஆண்டும் இடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி செலுத்தப்பட்டு வந்த வாடகை திடீரென நிறுத்தப்பட்டதால் குடியிருப்பு உரிமையாளா்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்.

வாடகை செலுத்தும் விவகாரத்தைப் பொருத்தமட்டில், உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மனுவின் தாமதம் மற்றும் முடிவு குறித்த நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, காலவரையின்றி வாடகை செலுத்துவது சாத்தியமில்லை’ என்றாா் யாதவ்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT