ஆன்மிகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினமணி

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டு இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமுா்த்தியாக தனிசன்னதியில் அருள்பாலித்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும், நவக்கிரங்களில் ஒன்றான கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்கு தனி சன்னதியும் உள்ளது. சுல்வனின் முக்கண்ணிலிருந்து தோன்றி முன்று பொறிகள் இந்த கோயிலில் முக்குளங்களாக தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு, கொடியேற்றபட்டது.

இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், ஊராட்சிமன்றத்தலைவா் சுகந்திநடராஜன். கோயில் மேலாளா் கண்ணன், பேஸ்கா் திருஞானம், முன்னாள் பள்ளி தலைமையாசிரியா் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

SCROLL FOR NEXT