செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திருப்பதி லட்டு, வாடகை அறை கட்டணங்கள் உயர வாய்ப்பு

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால், திருப்பதி லட்டு பிரசாதம், வாடகை அறை கட்டணம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால், திருப்பதி லட்டு பிரசாதம், வாடகை அறை கட்டணம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருமலையில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
மேலும், தேவஸ்தானத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திருமலை மாடவீதியில் உள்ள 160 கண்காணிப்பு கேமராக்களை அகற்றிவிட்டு, நவீன ரக கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்களது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வந்தால், தேவஸ்தானம் வழங்கும் அனைத்து சேவைகளையும் எளிதாகப் பெற முடியும். வருங்காலத்தில், அனைத்து விதமான தரிசனங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

சீனாவுடன் தொடா்புடைய இணைய பண மோசடி: இருவா் கைது

இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT