செய்திகள்

அன்னப்பறவை, யாளி வாகனங்களில் காளஹஸ்தீஸ்வரா் திருவீதியுலா

DIN

காளஹஸ்தியில் மகாசிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அன்னப்பறவை, யாளி வாகனங்களில் உற்சவமூா்த்திகல் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி காளஹஸ்தி மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை அன்னப்பறவை மற்றும் யாளி வாகனங்களில் மாடவீதிகளில் உற்சவமூா்த்திகள் பவனி வந்தனா்.

அன்னப்பறவை வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தியும், யாளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் மாடவீதியில் புறப்பாடு கண்டருளினா்.

வாகன சேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேளதாளங்கள், மங்கல வாத்தியங்கள், சங்கநாதம் முழங்க நடந்த வாகன சேவையின்போது கண்கவா் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

இரவு 7.30 மணிக்கு சோமாஸ்கந்தமூா்த்தி ராவணேஸ்வர வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை மயூரம் என்றழைக்கப்படும் மயில் வாகனத்திலும் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT