செய்திகள்

ஆடி மாத பௌர்ணமி: சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல தடை!

தினமணி

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் வழிபட, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி  பௌர்ணமியை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம்  தேதி முதல் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஆகஸ்ட் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

கவனத்தை ஈர்க்கும் ’இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டர்!

ஏற்றம் தருமா குரோதி வருடம்? 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2024

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

SCROLL FOR NEXT