சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் அண்மையில் பெய்த மழையால்
குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலை.
பம்மல் நகராட்சி
கவனத்துக்கு...!
பம்மல் வ.உ.சி. நகர் பகுதி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். ஆனால், வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளைக் கொட்டும் வகையில் அருகில் உள்ள பல்லாவரம் நகராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதைப் போல டம்பர் பிளேசர் எனப்படும் குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கு வழியின்றி, வீடுகளில் 2, 3 நாள்களுக்கு சேமித்து வைத்து அருகேயுள்ள மீன் மார்க்கெட் சந்து மற்றும் சூரியம்மன் கோயில் அருகில் கொட்டக்கூடிய நிலை தொடர்கிறது. எனவே, பம்பல் நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன்,
பம்மல்.