சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் உள்ள பார்க் சாலையில் ஓ.என்.ஜி.சி. அருகிலும், சிவா விஷ்ணு ஆலயம் அருகிலும் இரண்டு பெரிய பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியில் வேல்ஸ் முனையிலிருந்து லூகாஸ் டிவிஎஸ் வரை சிக்னல்கள் ஏதுமில்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், இப்பகுதியை பாதசாரிகளால் எளிதில் கடக்க முடிவதில்லை. எனவே, இரண்டு பூங்காக்களின் எதிரிலும் சிக்னல்களை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
-க.இளங்கோ,
அண்ணாநகர் மேற்கு.