ஐபிஎல்

பாண்டியா மீண்டும் அரைசதம்: குஜராத் 192 ரன்கள் விளாசல்

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

குஜராத்துக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மேத்யூ வேட் 12 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். 3-வது ஓவரில் குல்தீப் சென் பந்தில் விஜய் சங்கர் (2) ஆட்டமிழந்தார். பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 13 ரன்களுக்கு ரியான் பராக் பந்தில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த திணறிய நிலையில் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுடன் அபினவ் மனோகர் இணைந்தார்.

பாண்டியா சற்று துரிதமாக விளையாடி ரன் ரேட்டை பார்த்துக்கொள்ள, மனோகர் தொடக்கத்தில் சற்று தடுமாறினார். பிறகு மனோகர் சற்று அதிரடிக்கு மாறினார். பாண்டியாவும் 33-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.

15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், யூஸ்வேந்திர சஹால் வீசிய 16-வது ஓவரில் மனோகர் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி நேர அதிரடிக்கு பாண்டியாவுடன் இணைந்த டேவிட் மில்லர், குல்தீப் சென் வீசிய 19-வது ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸரை விளாச அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென், ரியான் பராக், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT