குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க | இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணி சிஸ்கே: ஆய்வில் தகவல்
அந்த அணியில் காயம் காரணமாக டிரென்ட் போல்ட் களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் விளையாடுகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் யஷ் தயால் மற்றும் விஜய் சங்கர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.