ஐபிஎல்

மும்பை வெற்றி: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை!

DIN


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

97 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரை சிறப்பாக வீசிய முகேஷ் சௌதரி கிஷன் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தைத் தந்தார். இதன்பிறகு, ரோஹித் சர்மா சற்று பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சென்னை பக்கம் திருப்பினார். ஆனால், சிமர்ஜித் சிங் சிறப்பான பந்துவீச்சில் ரோஹித் (18) விக்கெட்டை வீழ்த்தினார்.

5-வது ஓவரை வீசிய முகேஷ் சௌதரி டேனியல் சாம்ஸ் (1) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார்.

இதனால், முதல் 8 ஓவர்களை இவர்கள் இருவருமே வீசினர்.

எனினும், திலக் வர்மா மற்றும் ஹ்ரித்திக் ஷோகீன் இளம் வீரர்களாக இருந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ரன்னாக எடுத்தாலும் இலக்கு குறைவு என்பதால், மும்பைக்கு அது பலனளித்தது.

வெற்றியை நெருங்கியபோது மொயீன் அலி பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைபட்டு ஷோகீன் போல்டானார். அவர் 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் இரண்டு சிக்ஸரை பறக்கவிட்டு மும்பை வெற்றியை உறுதி செய்தார்.

14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். டேவிட் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT