முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்ப்து. அந்த அணியின் முஷ்ஃபிகர் ரஹீம் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நியூஸிலாந்துக்கு எதிராக அன்னிய மண்ணில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் டாம் லதாம் அதிகபட்சமாக 84 ரன்கள் விளாசினார். அடுத்தபடியாக நீல் புரூம் 63, கோரி ஆண்டர்சன் 24 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, சேன்ட்னர் டக் அவுட் ஆனார்.
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. ஜீதன் படேல் 7, ராஸ் டெய்லர் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக மோர்டாஸா, நாசிர், ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து 271 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய வங்கதேசத்தில் தொடக்க வீரர் தமீம் இக்பால் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிக்க, அடுத்து வந்த செளம்யா சர்கார் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் 65, மொஸாடெக் 10, ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களில் வீழ்ந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து வென்றது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 45, மஹ்முதுல்லா 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜீதன் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து: இதனிடையே நியூஸிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து அணிகள் பங்கேற்ற இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது. அந்த அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றியை பதிவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.