செய்திகள்

93-ஆவது எம்சிசி- முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப்போட்டி: நாளை தொடக்கம்

DIN


 93-ஆ வது எம்.சி.சி- முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப்போட்டி  ஆக. 29 ஆம்தேதி முதல் செப். 8 ஆம் தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் பத்து அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.6 லட்சம், ரூ. 3.50 லட்சம்  ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த முறை முதல்இரணடு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான பரிசுத்தொகை தலா ரூ.1லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர கூடுதலாக  சிறந்த பார்வர்டு வீரர், சிறந்த மிட்ஃபீல்டர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த தடுப்பாட்டக்காரர், ஒட்டு மொத்தப்போட்டியில் சிறப்பாக விளங்கும் ஆட்டக்காரர், இறுதிப்போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் என ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் உயர்தரமான சைக்கிள்களும் பரிசாக வழங்கப்படும்.
இந்தாண்டு டி.ஐ சைக்கிள் நிறுவனம் மோன்ட்ரா  மோஸ்ட் ஸடைலிஷ் பிளேயர் மற்றும் மோன்ட்ரா ஹை பெர்பர்மன்ஸ் பிளேயர் என  இரண்டு சிறப்பு விருதுகளை  வழங்க உள்ளது.  இந்த விருதுகளை பெறுவோருக்கு மோன்ட்ரா உயர்ரக சைக்கிள்களை பரிசாகவும் பெறுவர். இதைத்தவிர கூடுதலாக ஈஐடி பாரி நிறுவனம் இந்தப்போட்டியில் மிகவும் இயற்கையான முறையில் விளையாடும் ஒரு வீரருக்கு பாரிஸ் அம்ரித் விருதையும் சிறந்த தடுப்பாட்டக்காரருக்கு பாரிஸ் ஸ்பிருலினியா விருதையும்  வழங்கவுள்ளது. இந்த விருதை பெறும் விளையாட்டு வீரர்கள் தலா ரூ.10ஆயிரம் ரொக்கப்பரிசு பெறுவர்.
சென்னையில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம்  மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் கே. தனஞ்ஜெயதாஸ், அமைப்புச் செயலாளர் சி. என். சண்முகம், முருகப்பா குழுமத்தின் சார்பில்  பாரி என்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் மேலாண் இயக்குநர் அருண் முருகப்பன் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.
மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ. பிரிவில் இந்தியன் ஆயில், இந்திய ராணுவம், பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன், இந்திய விமானப்படை, பஞ்சாப் தேசிய வங்கி, பி பிரிவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், பஞ்சாப் சிந்து வங்கி, மத்திய செயலகம், இந்திய கடற்படை, தமிழ்நாடு ஹாக்கி அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் அதிகப் புள்ளிகள் பெறும் இரு அணிகள் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி 8 ஆம்தேதி  மின்னொளியில் நடைபெறும்.   நாள் ஒன்றுக்கு ஒரு போட்டி மின்னொளியில் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சாய் தன்ஷிகா

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள்: அண்ணாமலை

'அரண்மனை 4' முதல் பாடல் வெளியானது: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

SCROLL FOR NEXT