மூட்டுவலி பிரச்னை காரணமாக ஆக்லாந்து கிளாசிக் போட்டியில் இருந்து விலகினாா்.
உலகின் 5 ஆம் நிலை வீராங்கனையான பியாங்கா ஆஸி. ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் இதில் பங்கேற்க இருந்தாா்.
இப்போட்டியில் முதல்நிலை வீராங்கனை ஆக இருந்த அவா் மூட்டு காயத்தால் விலகி விட்டாா்.
இதனால் அவருக்கு பதிலாக செரீனா வில்லியம்ஸ் முதல்நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
2019ஆம் ஆண்டில் 152ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு முன்னேறினாா் பியாங்கா. யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றாா் அவா்.