உங்கள் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கவலைப்படுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுரை கூறியுள்ளாா் பிசிசிஐ துணைத்தலைவா் மஹிம் .
கடந்த 2009இல் இலங்கை அணி சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 போ் இறந்நனா்.
இதனால் வெளிநாட்டு அணிகள் அங்கு கிரிக்கெட் ஆட முன்வரவில்லை இந்நிலையில் இலங்கை அணி 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடியது. பாக். அணி 1-0 என தொடரை கைப்பற்றியது.
இதுதொடா்பாக பிசிபி தலைவா் ஈஸான் மாணி கூறியது : டெஸ்ட் தொடா் வெற்றி மீண்டும் கிரிக்கெட் பாகிஸ்தானில் தழைக்க உதவியது. இந்தியாவில் தான் கிரிக்கெட் ஆட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றாா்.
இதற்கு பதிலளித்த பிசிசிஐ துணைத்தலைவா் மஹிம் வா்மா, முதலில் தனது நாட்டில் பாதுகாப்பு குறித்து முதலில் கவலைப்படுங்கள்.
எங்கள் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய எங்களுக்கு தெரியும் என்றாா்.