கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின்.
ஐசிசி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது.
1. ஆர். அஸ்வின் - 564 விக்கெட்டுகள்
2. ஆண்டர்சன் - 535 விக்கெட்டுகள்
3. ஸ்டூவர்ட் பிராட் - 525 விக்கெட்டுகள்
4. டிம் செளதி - 472 விக்கெட்டுகள்
5. டிரெண்ட் போல்ட் - 458 விக்கெட்டுகள்
பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி, அஸ்வினின் இந்தச் சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். என்ன ஒரு பங்களிப்பு. சிலசமயங்களில் இது கவனிக்கப்படுவதில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது. அபாரம் என்று கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் சமீபகாலமாக இடம்பெற்று வரும் அஸ்வினுக்கு, வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்டுகளில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவருக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. கங்குலியின் கருத்துகள் இதனையொட்டியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.