செய்திகள்

தோனி ஒரு ஜாம்பவான்:கோலி புகழாரம்

DIN


தோனி ஒரு ஜாம்பவான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் கோலி, தோனி, பாண்டியா, பும்ரா, ஷமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். 
ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் தோனி ரன்களை மிகவும் மெதுவாக சேர்த்தார் என கடும் விமர்சனம் எழுந்தது. பிரபல வீரர் சச்சினும் இதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கேப்டன் கோலி கூறியுள்ளதாவது: 
தோனிக்கு மிடில் ஆர்டரில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். சில நேரம் அவரது ஆட்டம் நிதானமாக இருந்தால், உடனே விமர்சனம் செய்கின்றனர். பல ஆட்டங்களில் அவர் நமக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். 15 அல்லது 20 ரன்கள் கூடுதலாக தேவைப்படும் நேரத்தில் அதை எவ்வாறு எடுப்பது என தோனிக்கு தெரியும். 10-க்கு 8 முறை அவரது அனுபவம் நமக்கு பேருதவியாக இருந்தது.
268 ரன்களை எடுக்க தோனி உதவி புரிந்தார். தற்போது தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளோம். சில காலமாக நாம் அவ்வாறு தான் ஆடி வருகிறோம். கடந்த 2 ஆட்டங்களில் தொடக்க வரிசை சோபிக்கவில்லை. எனினும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளோம் என்றார் கோலி.

ஜேஸன்ஹோல்டர் (மே.இ.தீவுகள் கேப்டன்): எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனினும் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். தோனியை ஸ்டம்பிங் செய்வதில் தவறி விட்டோம். அதன் ஆபத்தை உணரவில்லை. பீல்டிங்கிலும் சில தவறுகளை செய்தது பாதகமாகி விட்டது. கெமர் ரோச் அற்புதமாக ஆடினார். பீல்டிங், பேட்டிங் இரண்டும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

முகமது ஷமி: என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு நானே தான் காரணம். ஏனென்றால் கடந்த 18 மாதங்களாக பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தேன். குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் மனநிம்மதி இழந்தேன். இதனால் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அனைத்து சிரமங்களையும் கடந்து மீண்டும் ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர்த்து போராட கடவுள் பலத்தை தந்தார். தனிப்பட்ட முறையில் கடினமாக உழைத்து உடல்தகுதியை மேம்படுத்தினேன். ஐபிஎல் போட்டியில் கெயிலுடன் ஆடியதால், அந்த அனுபவத்தின் மூலம் அவரை அவுட்டாக முடிந்தது.

ஜஸ்ப்ரீத் பும்ரா: மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மிகவும் சிறப்பான பேட்டிங் மேற்கொண்டார். சில நேரம் அவரது ஆட்டம் நிதானமாக இருந்தாலும், இறுதியில் பயன் தரும். அவர் ஆட்டத்தின் அழுத்ததை தான் ஏற்று, ஆட்டத்தை ஆழமாக கொண்டு செல்கிறார். இந்த பிட்சில் 268 என்பது சிறந்த ஸ்கோராகும். நான் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போது, ஹாட்ரிக் பெறலாம் என நினைத்தேன். ஆனால் அது கைகூடவில்லை என்றார்.

லோகேஷ் ராகுல்: எனது ஆட்டம் சிறிது அதிருப்தியாக உள்ளது. மேலும் கூடுதலாக சில ரன்களை சேர்த்திருக்கலாம். முதல் 15 ஓவர்கள் வரை ஆட கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். இன்னும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து கட்டாயம் கணிப்பு மேற்கொள்வேன். கோலியுடன் இணைந்து ஆட தயாராக வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

கோட் படத்தில் விஜயகாந்த்: பிரேமலதா தகவல்!

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

மெரினா அருகே சுறா நடமாட்டம்?

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

SCROLL FOR NEXT