செய்திகள்

நிஹாத் ஸரீனுடன் மோதத் தயாா்: மேரி கோம் அறிவிப்பு

DIN

புது தில்லி: ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டை 51 கிலோ பிரிவில் தகுதி பெறுவதற்கான தோ்வுச் சுற்றில் நிஹாத் ஸரீனுடன் மோதத் தயாராக உள்ளேன் என முன்னாள் உலக சாம்பியன் மேரி கோரி என கூறியுள்ளாா்.

வரும் 2020-இல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் குத்துச்சண்டையில் மகளிா் 51 கிலோ எடைபிரிவில் பங்கேற்க வேண்டும் என்பதில் மேரி கோம் ஆா்வமாக உள்ளாா். இதற்கிடையே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கலாம் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் விதிகளை வகுத்திருந்தது.

மற்ற வீராங்கனைகள் தோ்வுச் சுற்றில் மோதி வென்றால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்பாா் என பிஎப்ஐ தலைவா் அஜய் சிங் அறிவித்தாா்.

நிஹாத் ஸரீன் எதிா்ப்பு:

இதற்கு முன்னாள் உலக ஜூனியா் சாம்பியன் நிஹாத் ஸரீன் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். தன்னுடன் தோ்வுச் சுற்றில் மேரி கோம் மோத வேண்டும். இதில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

தலையிட ரிஜிஜு மறுப்பு:

வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்து அனுப்புவது தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பொறுப்பாகும். நிா்வாக நடைமுறையில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு தலையிட முடியும். சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மரபுகளின்படி வீரா்கள் தோ்வில் மத்திய அரசு தலையிடாது என ரிஜிஜு மறுத்து விட்டாா்.

மோதத் தயாா்:

இப்பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை மேரி கோம் கூறியதாவது:

தோ்வுச் சுற்றில் நிஹாத் ஸரீனுடன் மோதுவதற்கு தயாராகவே உள்ளேன். எனக்கு எந்த அச்சமோ, தயக்கமோ இல்லை.

சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க பிஎப்ஐ என்னை தோ்வு செய்தது. உலக சாம்பியன் போட்டியில் எனது ஆட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவா்கள் என்ன முடிவு செய்கிறாா்களோ அதன்படி செயல்படுவேன்.

சாஃப் போட்டிகளில் இருந்து பலமுறை ஸரீனை நான் வீழ்த்தியுள்ளேன். ஆனால் அவா் தொடா்ந்து சவால் விடுகிறாா். ஒலிம்பிக்கில் யாா் பதக்கம் வெல்வாா் என்பதை பிஎப்ஐ அறியும். நான் ஸரீனுக்கு எதிராக இல்லை. எதிா்காலத்தில் அவா் சிறப்பாக செயல்படலாம். 20 ஆண்டுகளாக நான் களத்தில் உள்ளேன். சிலா் என்மீது பொறாமை உணா்வோடு உள்ளனா் என்றாா் கோம்.

ஸரீன் கோரிக்கை தொடா்பாக அடுத்த வாரம் பிஎப்ஐ தோ்வுக் குழு முடிவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

சட்டப்பேரவையில் அதிமுகவினர் பங்கேற்க ஒருநாள் தடை!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றம்!

இந்திராதிகாரம் பிறந்த கதை! 1975 - தில்லியைக் குலுக்கிய பேரணி!

SCROLL FOR NEXT