செய்திகள்

கேரள அணியிலிருந்து விலகிய டேவ் வாட்மோர், பரோடா அணியின் இயக்குநராக நியமனம்!

DIN

புகழ்பெற்ற பயிற்சியாளர் டேவ் வாட்மோர், பரோடா கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவ் வாட்மோர், கேரள அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி 2018-19-ல் முதல்முறையாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அங்கு மூன்று வருடங்கள் பயிற்சியாளராகப் பணியாற்றினார். கடந்த வருடம் பங்கேற்ற 18 அணிகளில் 17-வது இடத்தையே பிடித்தது கேரள அணி. எட்டு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பரோடா அணியின் இயக்குநராக வாட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தபிறகு, பரோடாவில் குறைந்த 9 மாதங்களாவது வசிக்க வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார் டேவ் வாட்மோர்.

இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளின் பயிற்சியாளராக வாட்மோர் பணியாற்றியுள்ளார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது 1996-ல் இலங்கை அணி, ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT