செய்திகள்

அசார் அரைசதம்: தேநீர் இடைவேளையில் பாக். 158/5

DIN


இங்கிலாந்துடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி அரைசதம் அடித்து ஆறுதல் அளித்து வருகிறார்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 10 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை: இங்கே க்ளிக் செய்யவும்..

கேப்டன் அசார் அலியுடன் நிதானம் காட்டி வந்த அலாம் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையை அடைந்தது பாகிஸ்தான். இதையடுத்து, கேப்டன் அசாருடன் முகமது ரிஸ்வான் இணைந்தார்.

தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், இந்த இணை நம்பிக்கையளிக்கும் வகையில் பாட்னர்ஷிப் அமைத்தது. பொறுப்புடன் விளையாடி வந்த அசார் அலி அரைசதத்தைக் கடந்தார். இந்த இணை தேநீர் இடைவேளை வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 82 ரன்களுடனும், ரிஸ்வான் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் 425 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT