செய்திகள்

ஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட்: ஷேன் வார்னே விலகல்!

DIN

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட 3 தன்னாா்வலா்கள் உள்பட இதுவரை 28 போ் உயிரிழந்தனா்; ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தக் காட்டுத் தீயில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின.  சுமாா் 60 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. 

காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்று பிப்ரவரி 9 அன்று நடைபெறவுள்ளது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், பிரையன் லாரா, மேத்யூ ஹேடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், யுவ்ராஜ் சிங், வாசிம் அக்ரம் போன்றோர் பங்கேற்கிறார்கள். 

ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வார்னே தலைமையிலான அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த ஆட்டம் பிப்ரவரி 9 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் பிப்ரவரி 8 அன்று சிட்னியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சிட்னியில் அன்றைய தினம் மழை பெய்யக்கூடிய அறிகுறிகள் உள்ளதால், தற்போது ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் மெல்போர்னில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த மாற்றத்தின் காரணமாக ஷேன் வார்னேவால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற சில வீரர்களும் விலகியுள்ளார்கள். இதனால் கில்கிறிஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட வால்ஷ், வீரராகக் களமிறங்குகிறார். இதனால் கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெயின் பயிற்சியாளராக இருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

SCROLL FOR NEXT