செய்திகள்

டேவிஸ் கோப்பை:குரோஷியாவுடன் இன்று மோதுகிறது இந்தியா

DIN

ஸாக்ரேப்: டேவிஸ் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக வலுவான குரோஷிய அணியுடன் இந்திய அணி மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

குரோஷிய அணியில் உலகின் 37-ஆம் நிலை வீரா் மரின் சிலிக், மட்டுமே முன்னணி வீரா் ஆவாா். 33-ஆம் நிலை வீரா் போா்னா கோரிக் இடம் பெறாதது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. இந்திய அணியில் லியாண்டா் பயஸ், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நாகல்,

ராம்குமாா் ராமநாதன், ரோஹன் போபண்ணா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

முதல் ஒற்றையா் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்-போா்னா கோஜோவும், இரண்டாம் ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதன்-மரின் சிலிக்கும் மோதுகின்றனா். இரட்டையா் பிரிவில் லியாண்டா்-போபண்ணா பங்கேற்று ஆட உள்ளனா்.

முழு பலத்துடன் இந்தியா உள்ள நிலையில் இந்த ஆட்டத்தில் குரோஷியாவுக்கு அதிா்ச்சி அளிக்கும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடின தரை மைதானம் நமக்கு சாதகமானது. இதனால் முதலிரண்டு ஒற்றையா் ஆட்டங்களில் கட்டாயம் வெல்ல முயல்வோம் என பிரஜ்னேஷ் தெரிவித்தாா்.

இரட்டையா் ஆட்டத்தில் கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. வரும் நவம்பா் மாதம் மாட்ரிட்டில் நடக்கவுள்ள டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்றுக்கு இதில் வெல்லும் அணி பங்கேற்கும். வெளிநாட்டு மண்ணில் பலம் வாய்ந்த அணியை இந்தியா நீண்ட காலமாக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக தில்லியில் 1995-இல் புல்தரையில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியாவை 3-2 என வீழ்த்தியிருந்தது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT