செய்திகள்

அதிகரித்த கரோனா பாதிப்பு: முதல் டெஸ்ட் ஆட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி!

DIN


கரோனா பாதிப்பு இருந்தாலும் முதல் டெஸ்ட் ஆட்டத்தை அடிலெய்டில் நடத்த உறுதியாக உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்நிலையில் அடிலெய்டைத் தலைநகராகக் கொண்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் நேற்று 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இன்று ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா உள்ளிட்ட பகுதிகள் உடனடியாக தங்களை எல்லைகளை மூடிக்கொண்டன. அடிலெய்டில் இருந்து வருபவர்கள் இரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குயின்ஸ்லாந்து மாநிலம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் வீரர்கள், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் பிக் பாஷ் போட்டி வீரர்கள் எனப் பலரையும் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இருந்து விமானம் மூலமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த மாற்றங்கள் காரணமாக பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் நிலைமையைக் கவனித்து வருகிறோம். முதல் டெஸ்டை அடிலெய்டில் நடத்த உறுதியாக உள்ளோம். மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, குயின்ஸ்லாந்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சியாளர்களும் ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இன்று சிட்னிக்குப் பயணம் செய்துள்ளார்கள். அனைத்து வீரர்களும் பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் என நம்புகிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT