செய்திகள்

டி20 போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளாரா ரஸ்ஸல்?: மே.இ. தீவுகள் பயிற்சியாளர் ஆச்சர்யம்!

DIN

எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது. 21 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கண்டி டஸ்கர்ஸ், டம்புல்லா ஹாக்ஸ், கேலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரபல வீரர் ரஸ்ஸல், கொழும்பு கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்.

நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் வரும் 27-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகிறது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் டி20 அணியில் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.

நியூசிலாந்துக்கு எதிராக விளையாட முடியாத ரஸ்ஸல், எப்படி எல்பிஎல் டி20 போட்டியில் விளையாடுகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்பிஎல் போட்டிக்காக இலங்கையில் உள்ளாரா ரஸ்ஸல்? எனக்குப் புதிய செய்தி இது. நாங்கள் நியூசிலாந்துக்கு வந்த பிறகு நான் அவரிடம் பேசவில்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு அவரிடம் தொடர்பு கொள்ளவில்லை. இலங்கையில் அவர் தற்போது உள்ளார் என்பது எனக்குத் தெரியாது. சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளாமல் என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT