செய்திகள்

யூரோ கோப்பை: பெனால்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி

DIN


யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின. 

உலகத் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின், இந்தப் போட்டியில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சீசன் குரூப் சுற்றில் முதலிரு ஆட்டங்களை சமன் செய்த ஸ்பெயின், கடைசி ஆட்டத்தில் வென்றது. நாக் அவுட் சுற்றில் குரோஷியாவையும், காலிறுதியில் ஸ்விட்சா்லாந்தையும் வீழ்த்தியது.

உலகத் தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலி, ஒரேயொரு முறை இப்போட்டியில் சாம்பியனாகியுள்ளது. இந்த சீசனில் குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ததுடன், நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவையும், காலிறுதியில் உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியத்தையும் தோற்கடித்து முன்னேறி வந்துள்ளது. இத்தாலி கடந்த 2018 செப்டம்பா் முதல் தொடா்ந்து 32 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை.

லண்டனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நன்கு விளையாடினாலும் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷுட் அவுட் முறையில் 4-2 என இத்தாலி வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - டென்மாா்க் அணிகள் மோதும் 2-வது அரையிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT