ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து டேவிட் மலான் 888 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் (830), பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் (828), நியூசிலாந்தின் டெவான் கான்வே (774) ஆகியோர் உள்ளனர். இதைத் தொடர்ந்து, கோலி (762), ராகுல் (743) உள்ளனர்.
இந்திய அணியிலிருந்து முதல் 10 இடங்களில் ராகுல் மற்றும் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஒரு இந்தியர்கூட முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
ஒருநாள் தரவரிசை:
ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே முதல் 5 இடங்களில் உள்ளனர். இருவரும் முறையே 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியிலிருந்து ஜாஸ்பிரீத் பூம்ரா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் முதன்முறையாக 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.