செய்திகள்

தோனியைப் போல விளையாட ஆசைப்படும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் களத்தில் செயல்பட விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 9) தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் தோனி குறித்து கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவில் டுவைன் பிரிட்டோரியஸ் இடம்பெற்றுள்ளார்.

தோனி குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ நான் தோனியிடமிருந்து கற்றுக் கொண்ட மிகப் பெரிய விஷயம் பேட்டிங் செய்யும் போது பதற்றப்படமால் தன் மேல் இருக்கும் அழுத்தத்தை பந்துவீச்சாளரின் மீது மாற்றி விடுவார். அவர் களத்தில் பேட்டிங் செய்யும் போது அதிகமாக சந்தோஷப் பட மாட்டார். அதேபோல தனது நம்பிக்கையையும் எப்போதும் இழக்க மாட்டார். அவர் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பார். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை அவர் நம்புகிறார். அவரது அந்த அமைதியையும், நம்பிக்கையையும் என்னுடைய ஆட்டத்தில் கொண்டுவரப் போகிறேன். ஆட்டத்தின் இறுதி ஓவரின் கடைசி 3 பந்தில் 18 ரன்கள் தேவைப்படும் பட்சத்தில் நம்பிக்கையுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என்பதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன்” என்றார்.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டுவைன் பிரிட்டோரியஸ் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் இரண்டாவது பேட்டிங்கில் தோனியுடன் இணைந்து விளையாடி சென்னை அணியை பிரிட்டோரியஸ் வெற்றி பெறச் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

SCROLL FOR NEXT