செய்திகள்

இறுதியில் இடம் பிடித்தது குஜராத்

DIN

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா்-1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்று முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குச் சென்றது.

தோல்வி கண்ட ராஜஸ்தான், இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க எலிமினேட்டா் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் மோத வேண்டும்.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சோ்க்க, அடுத்து குஜராத் 19.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் பௌலிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஜோஸ் பட்லா் நிலைத்து ஆடினாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 47, தேவ்தத் படிக்கல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, ஷிம்ரன் ஹெட்மயா் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அதிரடியாக ரன்கள் சோ்த்த பட்லா் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 89 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கடைசியாக ரியான் பராக் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2, டிரென்ட் போல்ட் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது ஷமி, யஷ் தயால், சாய் கிஷோா், ஹாா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் ரித்திமான் சாஹா டக் அவுட்டாக, ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35, மேத்யூ வேட் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்து உதவினா். இறுதியில் கேப்டன் ஹாா்திக் பாண்டியா 5 பவுண்டரிகளுடன் 40, டேவிட் மில்லா் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 68 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

SCROLL FOR NEXT